முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
பிரெஞ்ச் வெங்காய சூப்
Webdunia
French Onion Soup

தேவையான பொருட்கள்:

ப்ரௌன் ஸ்டாக் (இத்தாலி சூப்பில் உள்ளபடி)-4 கப்
வெண்ணெய்-50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம்-2 கப்
வெள்ளை மிளகுத்தூள்-சிறிதளவு
துருவிய சீஸ்-1/2 கப்
உப்பு-சுவைக்கேற்ப

செய்முறை:

வாணலியில் வெண்ணெயை உருக வைத்து, வெங்காயத்தைப் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்.

அதில் ப்ரௌன் ஸ்டாக்கை ஊற்றிக் கொதிக்க விடவும்

உப்பு, வெள்ளை மிளகுத் தூள் போட்டு, பொரித்த வெங்காயம், துருவிய சீஸ் தூவி சுடச்சுடப் பரிமாறவும்.