முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
மெக்ஸிகன் டார்டிலா சூப்
Webdunia
Mexican Tartila Soup

எப்படிச் செய்வது?

1 கப் மக்காச் சோளமாவில் உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசையவும். இதை மெல்லிய வட்டங்களாக இட்டு முக்கோண வடிவத்தில் வெட்டிப் பொரித்தெடுத்தால் "டார்ட்டிலா" ரெடி.

வாணலியில் சாதாரண எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். இத்துடன் 1/2 கப் வெள்ளரிக்காய், 1/2 கப் சின்ன கோஸ், துருவிய காரட் ஒன்று நறுக்கிய உருளைக் கிழங்கு ஒன்று. தக்காளி இரண்டு சேர்த்து வதக்கி நீரில் வேக வைக்கவும்.

வெந்த பின்பு, உப்பு, மிளகுத்தூள், சீரகப் பொடி, மிளகாய்ப் பொடி, சிறிதளவு துருவிய மக்காச் சோளம் போட்டுக் கொதிக்க விட்டால் சூப் ரெடி.

பொரித்து வைத்துள்ள டார்ட்டிலாவுடன் சூப்பைப் பரிமாறவும்.