Steamed Banana Pudding
கன்டென்ஸ்டு பால் - 1 டீஸ்பூன் மைதா - 250கிராம் மசித்த வாழைப்பழம் - 2 கப் வாழைப்பழ எஸென்ஸ் - 2 டீஸ்பூன் சர்க்கரை - 1 கப் பேகிங் பவுடர் - 2 டீஸ்பூன் சோடா உப்பு - 1 டீஸ்பூன் வெண்ணெய் - 125 கிராம் சூடான பால் - 2 கப்
செய்முறை:
கண்டென்ஸ்டு மில்க், சர்க்கரை, வெண்ணெய் இவற்றைச் சேர்த்து, நுரைக்க அடிக்கவும். மசித்த வாழைப்பழம், எஸென்ஸ் முதலியவை சேர்த்து அடிக்கவும். மைதா, சோடா, பேகிங் பவுடர் சேர்த்து சலிக்கவும்.
பின் கண்டென்ஸ்டு மில்க் கலவையுடன் சிறிது சிறிதாகக் கலந்து பின் சூடான பாலையும் ஊற்றிக் கலக்கவும். கலவை தளர இருக்க வேண்டும். இப்போது ஒரு அலுமினிய புட்டிங் மோல்ட் அல்லது பேகிங் செய்யும் அலுமினியப் பாத்திரத்தை எடுத்து அதில் வெண்ணெய் தடவி, மைதா தூவி, தயாராக வைத்துள்ள கலவையை அதில் கொட்டி, ஒரு ப்ரஷர் குக்கரிலோ அல்லது ஒரு வாயகன்ற வாணலியில் தண்ணீர் விட்டு அதனில் வைத்தோ ஆவியில் வைக்க வேண்டும். நன்றாக வெந்த பின், தட்டின் மேல் கவிழ்த்துக் கொட்டிப் பின் கஸ்டர்ட் சாஸ் கொண்டு அலங்கரித்து சுடச்சுடப் பரிமாறவும்.
|