முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
கிரேக் டிஷ் - டோல்மா
Webdunia
கேபேஜ் இலைகள் - 10-12
முதலில் இலைகளை கொதிக்கும் வெண்ணீரில் போட்டு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிட்டு, (5 நிமிடம் வெளியில் எடுத்து ஆற வைக்கவும்)

உள்ளே ஸ்டப்பிங் செய்ய

வேக வைத்துத் துருவிய உருளைக் கிழங்கு-2 கப்
மிகப் பொடியாக நறுக்கிய வெங்காயம்-1/2 கப்
எள்-சிறிதளவு
பொடியாக நறுக்கிய பூண்டு-2 மேஜைக் கரண்டி
ஊற வைத்த அரிசி-1/2 கப்
வேக வைத்த பட்டாணி-1/4 கப்
உப்பு-சிறிதளவு
மிளகுத்தூள்-தேவையான அளவு
வெண்ணெய்-சிறிதளவு

செய்முறை

ஸ்டப்பிங் செய்யும் அனைத்தையும் கலந்து கொளள்ளவும்(அரிசியையும் சேர்த்து), பின் சிறிதளவு எலுமிச்சை சாறும் கலந்து கோஸ் இலைகளின் நடுவில் வைத்து நாலுபக்கமும் இலைகளை மடித்து விடவும். பின் ஆவியில் வைத்து வெந்து எடுக்கவும். இல்லையெனில், ப்ரெஷர் குக்கரில் ஒரு பாத்திரத்தில் வைத்து வேக விடவும். அரிசி வெந்த பின், இந்த டால்மாக்சனை ஒரு வெண்ணை தடவிய பேகிங் டிரேயில் அடுக்கி, மேலே ஒயிட் சாஸ் பரத்தி துருவிய சீஸ் தூவி, தக்காளி சாஸும் தூவி, 180 உஷ்ணத்தில் பேக் செய்யவும்.