முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  சமைக்கத் தயாரா?
 
மெக்ரோனி ரிசோட்டோ
Webdunia
வெங்காயம்-1 கப்(துண்டுகளாக்கியது)
பூண்டு-1 மேஜைக் கரண்டி(பொடிப் பொடியாக நறுக்கியது)
தக்காளி கெச்சப் அல்லது சாஸ்
துருவிய சீஸ்-1 கப்
சில்லி சாஸ்-விருப்பப்படி
உப்பு-தேவையான அளவு
மிளகுத்தூள்-1 டீஸ்பூன்
அரிசி-3/4 கப்
மக்ரோனி-1 கப்
ஒயிட் சாஸ்-2 கப்

செய்முறை

1) மக்ரோனியை கொதிக்கும் வெந்நீரில் போட்டு 10-15 நிமிடம் வேக வைத்து வெந்தவுடன் வடிகட்டி வெண்ணெய் தடவி ஒரு தட்டில் பரத்தவும்.

2) ஒயிட் சாஸ் செய்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்

3) கடாயை வைத்து, வெண்ணையை காய வைத்து வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி ஊற வைத்த அரிசி சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். உப்பு மிளகுத்தூள் சேர்த்து வேக விடவும்.

4) ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் காயவைத்து ரெடியாக உள்ள மக்ரோனி, தக்காளி கெச்சப், சில்லி சாஸ் முதலியவை கலந்து வதக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் தடவி, சாதம், மக்ரோணி, ஒயிட் சாஸ் முதலியவைகளை ஒன்றன் மேல் ஒன்றாகப் பரத்தி, கடைசியில் சீஸ் தூவி 180 C யில் 1/2 மணி பேக் செய்யவும்.(விருப்பப்பட்டால் குடைமிளகாய் காளான் முதலியவைகளை பொடியாக அரிந்து மக்ரோனியுடன் சேர்த்து வதக்கலாம்).