இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » அசைவம் » ‌இறா‌ல் வறுவ‌ல் (Prawn Fry)
Feedback Print Bookmark and Share
 
தேவையான பொருட்கள்

உரித்த இறால் - 1 க‌ப்
தக்காளி சாஸ்
மிளகாய்‌ப் பொடி - 1 தே‌க்கர‌ண்டி
சைனீஸ் உப்பு - ஒரு ‌சி‌ட்டிகை
மோனோ சோடியம் குளுடோமேட்
கார்ன்ஃபிளோர் - 4 மேஜை‌க் கர‌ண்டி
இஞ்சி, பூண்டு விழுது - 2 தே‌க்கர‌ண்டி
1 மு‌ட்டை‌‌யி‌ன் வெ‌ள்ளை‌ப் பகு‌தி
உப்பு
எண்ணெய் - ‌1 ‌லி‌ட்ட‌ர்

செய்முறை

ஒரு ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் முட்டையின் வெள்ளை‌க் கரு, பா‌தி கார்ன்ஃபிளோர், ‌சி‌றிது உப்பு சே‌ர்‌த்து தண்ணீர் ம‌ற்று‌ம் எண்ணெய் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.

அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊற ‌விடவு‌ம்.

தக்காளி சாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் தூ‌ள் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.

தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊற வைத்த இறாலை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

3 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.

இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும்.

இறால் - சைனீஸ் முறை‌யி‌ல் தயா‌ர்
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: இறால் வறுவல்