இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » அசைவம் » மீ‌ன் துவ‌ட்ட‌ல் (Fish Curry | Non Veg Item)
Feedback Print Bookmark and Share
 
மீ‌ன் துவ‌ட்ட‌ல் செ‌ய்வது எ‌ளிது. இது ‌மிகவு‌ம் ரு‌சியாக இரு‌க்கு‌ம்.

தேவையான பொருட்க‌ள்

நெத்தலி மீன் - கா‌ல் ‌கிலோ
துருவிய தேங்காய் - அரை க‌ப்
சமையல் எண்ணைய் - 1 தே‌க்கர‌ண்டி
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் -2
மஞ்சள் தூள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
பு‌ளி, இஞ்சி, உ‌ப்பு - தேவையான அளவு

செய்முறை

துருவிய தேங்காயுடன் சிறிதாக வெட்டிய வெங்காயம், நசு‌க்‌கிய இஞ்சி, மஞ்சள் துள், பச்சை மிளகாய், உப்பு சே‌ர்‌த்து பிசையவும்.

இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பாத்திரம் ஒன்றில் வேக வைக்கவும் .

அதனுள் சுத்தம் செய்யப்பட்ட மீனையும், கறிவேப்பிலையும் இட்டு நன்றாக அவிய விடவும்.

ஈரப்பத‌ம் போகும் வரை நன்றாக கிளறி விட்டுக் கொண்டு இருக்கவும் .

பின்னர் சிறிதளவு எண்ணைய் சேர்த்து மேலும் சிறிது நேரம் கிளறி விடவும்.

வறுவல் நன்கு பொன்னிறமாக வந்த பின்னர் சிறிதளவு புளி விட்டு இறக்கவும

இருபதே நிமிடங்களில் சுவையான கேரளா மீன் வறுவல் தயா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: மீன் துவட்டல்