முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > அசைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
கோ‌ழி‌க்க‌றி குழ‌ம்பு  Search similar articles
இ‌ட்‌லி‌க்கு‌ ஏ‌ற்ற கோ‌ழி‌க்க‌றி குழ‌ம்பு தயா‌ர் செ‌ய்வது எ‌ன்பது பலரு‌க்கு‌த் தெ‌ரிவ‌தி‌ல்லை. அதாவது சா‌ப்பாடு‌க்கு செ‌‌‌ய்வது போலவே செ‌ய்து ‌விடு‌கி‌ன்றன‌ர். அ‌வ்வாறு இ‌ல்லாம‌ல் இ‌னி இ‌ந்த முறையை‌ப் ‌பி‌ன்‌ப‌ற்‌றி‌ப் பாரு‌ங்க‌ள்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

கோ‌ழி‌க்க‌றி - 1/4 ‌கிலோ
வெ‌ங்காய‌ம் - 2
த‌க்கா‌ளி - 2
இ‌ஞ்‌சி, பூ‌ண்டு
மிளகு தூ‌ள் - 1 ‌டீ‌‌ஸ்பூ‌ன்
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - 1/2 ‌டீ‌‌ஸ்பூ‌ன்
மிளகா‌ய் தூ‌ள் - 1 1/2 ‌டீ‌‌ஸ்பூ‌ன்
உ‌ப்பு
எ‌ண்ணெ‌ய்
சோ‌ம்பு
கருவே‌ப்‌பிலை


செ‌ய்யு‌ம் முறை

கோ‌ழி‌க்க‌றியை உ‌ங்களு‌க்கு ஏ‌ற்ற வகை‌யி‌ல் ‌சிறு ‌சிறு து‌ண்டுகளாக வெ‌ட்டி‌க் கொ‌ள்ளவு‌ம். க‌றி‌த் து‌ண்டுகளை ந‌ன்கு அல‌சி சு‌த்த‌ம் செ‌ய்து கொ‌ள்ளவு‌ம்.

ஒரு பா‌த்‌திர‌த்‌தி‌ல் சு‌த்தமான க‌றி து‌ண்டுகளை‌ப் போ‌ட்டு 1 பெ‌ரிய ட‌ம்ள‌‌ர் ‌நீரை அ‌தி‌ல் ஊ‌ற்றவு‌ம். அதனுட‌ன் ‌மிளகு தூ‌ள், ம‌‌ஞ்ச‌ள் தூ‌ள், ‌மிளகா‌ய் தூ‌ள், உ‌ப்பு போ‌ட்டு வேக வை‌க்கவு‌ம்.

அத‌ற்கு‌ள் த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌ம், இ‌ஞ்‌சி பூ‌ண்டு ஆ‌கியவ‌ற்றை ந‌ன்கு ‌விழுதாக அரை‌த்து‌ வேகு‌ம் க‌றியுட‌ன் சே‌ர்‌க்கவு‌ம்.

த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌த்தை அரை‌த்து சே‌ர்‌ப்பதா‌ல் குழ‌ம்பு ந‌‌ல்ல சுவையுடனு‌ம் ‌தி‌க்காகவு‌ம் இரு‌க்கு‌ம்.

த‌னியாக வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு சோ‌ம்பு, க‌றிவே‌‌ப்‌பிலை போ‌ட்டு தா‌ளி‌த்து குழ‌ம்‌பி‌ல் கொ‌ட்டவு‌ம்.

அருமையான க‌றி‌க்குழ‌ம்பு தயா‌ர்.
மேலும்
இறால் தொ‌க்கு
த‌க்கா‌ளி மீன் குழம்பு
காளான் குழம்பு
மீன் கட்லெட்
சை‌னீ‌ஸ் இறால் வறுவ‌ல்
கார‌ப் பொடி இட்‌லி