முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > அசைவம்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காளான் குழம்பு
காளானை வெ‌ங்காய‌ம், த‌க்கா‌ளி போ‌ட்டு வறு‌த்தோ அ‌ல்லது காளா‌ன் ‌ப்ரை‌ட் ரை‌ஸோ தா‌ன் செ‌ய்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். இது புது ‌விதமாக காளா‌ன் குழ‌ம்பு. செ‌ய்து பாரு‌ங்க‌ள், இத‌ன் ரு‌சி உ‌ங்களு‌க்கு ‌நி‌ச்சய‌ம் ‌பிடி‌க்கு‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

காளான் - 200 கிராம்
மிளகு - 25 கிராம்
ஏலக்காய் - 5
பட்டை, கிராம்பு - ‌சி‌றிது
பூண்டு - 10 ப‌ள்ளு
தேங்காய் - 1 (துருவியது)
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
மிளகாய்த் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செ‌ய்யு‌‌ம் முறை

தேங்காய் துருவலை அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும்.

பி‌ன்ன‌ர் மிளகு, ஏலக்காய், பட்டை, கிராம்பு, பூண்டு ஆகியவற்றை அரை‌த்து ‌விழுதாக எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

காளானை கழுவி அதை இரண்டு இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளியையும், வெங்காயத்தையும் பொடியாக நறு‌க்‌கி வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

இவை அனை‌த்தையு‌ம் தயா‌ர் செ‌ய்து வை‌த்து‌க் கொ‌ண்ட ‌பி‌ன்ன‌ர் அடு‌ப்‌பி‌ல் வாணலி வை‌த்து அ‌தி‌ல் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போ‌ட்டு தா‌ளி‌த்தது‌ம், வெ‌ங்காய‌‌‌த்தை போ‌ட்டு வத‌க்கவு‌ம். பிறகு காளானை‌ப் போ‌ட்டு வத‌க்‌‌கி‌க் கொ‌ள்ளவு‌ம்.

காளா‌ன் ந‌ன்கு வத‌ங்‌கியது‌ம் த‌‌க்கா‌‌ளியை‌ப் போடவு‌ம். ‌பி‌ன்ன‌ர் அரைத்து வைத்திருக்கும் மசாலாத்தூள் ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கவும்.

பிறகு தேங்காய்ப் பாலை விட்டுக் கலக்கவும். இறு‌தியாக தேவையான அள‌வி‌ற்கு உ‌ப்பு, மிளகாயத் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

தே‌ங்கா‌ய்‌ப் பா‌ல் ‌வி‌ட்டு சுமா‌ர் 5 ‌நி‌மிட‌ங்க‌ள் கொ‌தி‌‌த்தாலே போது‌ம். சுவையான காளா‌ன் குழ‌ம்பு தயாரா‌கி‌விடு‌ம்.
மேலும்
மீன் கட்லெட்
சை‌னீ‌ஸ் இறால் வறுவ‌ல்
கார‌ப் பொடி இட்‌லி
இறால் - சைனீஸ் ஸ்டைல்
மீன் ஊறுகாய்
மீன் வறுவல்