காரப் பொடி இட்லியைப் போன்ற ஒரு எளிதான மாலை உணவு வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அதுவும் மதியமே செய்து ஊற வைத்துவிட்டால்... சொல்லவே வேண்டாம்.
தேவையானவை இட்லி மாவு - 1/2 கிலோ இட்லி மிளகாய்ப் பொடி - 1 கப் (பருப்புகள் போட்டு அரைத்தது) பூண்டு எண்ணெய்
செய்யும் முறை
இட்லி மாவை இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுங்கள்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மிளகாய்ப் பொடியைக் கொட்டி அதில் எண்ணெய் அல்லது நெய் விட்டு நன்கு கிளறி விடுங்கள்.
சிறிது பூண்டை தட்டிப் போடவும்.
பிறகு ஒவ்வொரு இட்லிகளாக மிளகாய்ப் பொடி இட்லியில் இரண்டு பக்கமும் படும்படி செய்து தனியாக எடுத்து வைக்கவும்.
சிறிது நேரம் மிளகாய் பொடியில் இட்லி ஊறியதும் எடுத்துப் பரிமாறவும்.
|