சாதத்தையும், கோழிக்கறி மசாலாவையும் தனித்தனியாக தயாரித்து கலந்து கொள்ளும் முறை...
பிரியாணி அரிசி - 1 கி கி கோழி - 2 கிலோ இஞ்சி- 100 கி பூண்டு - 100 கி ப. மிளகாய் - 25 தக்காளி - 1/4 கி வெங்காயம்- 1\4 கி புதினா, கொத்துமல்லி - 1\2 கட்டு நெய் - 1/4 கி பட்டை, இலவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் - 15 கிராம் தயிர் - 200 கிராம்
இஞ்சி, பூட்டை அரைத்துக் கொள்ளவும். ப.மிளகாயை தனியாக அரைக்கவும். கோழி கறித் துண்டுகளை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். நெய்யை 2 பாகமாக பிரித்து வைத்துக் கொள்ளவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு பாக நெய்யை ஊற்றி காய்ந்ததும் அதில் பச்சை மிளகாய் விழுதை போட்டு 5 நிமிடம் வதக்கி அதில் கோழிக் கறியை போட்டு 5 நிமிடம் வதக்கியதும் 2 தேக்கரண்டி மஞ்சள் தூளைப் போட்டு வதக்க இறக்கவும். அதில் தயிரைப் போட்டு தேவையான உப்பைப் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து மீதி நெய்யை ஊற்றி அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் தட்டிப் போட்டு, பிரிஞ்சி இலையைப் போட்டு அதில் வெங்காயத்தை வதக்கி பின்னர், தக்காளியை வதக்கி புதினா இலை, மல்லி இலை சேர்க்கவும். பின்னர் ஊற வைத்திருக்கும் கறியையும் அதில் சேர்த்து குக்கரை மூடவும். ஒரு விசில் வந்ததும் அடுப்பின் அனலைக் குறைத்து 10 நிமிடம் கழித்து இறக்கிக் கொள்ளவும். தனியாக சாதம் வடித்து இதோடு கலந்து கொள்ளவும்.
|