சிக்கன் பிரியாணி

ஞாயிறு, 11 ஜனவரி 2009 (17:01 IST)

Widgets Magazine

சிக்கன் பிரியாணி
webdunia photoWD
அசைவத்தில் எல்லோரும் எளிதாக வீட்டில் சமைத்து ருசிக்க சிக்கன் பிரியாணி ஏற்ற உணவு.

தேவையான பொருட்கள

கோழிக்கறி - 1/2 கிலோ
அரிசி - 1/2 கிலோ
எண்ணெய் - தேவையான அளவு
முந்திரி - 8
வெங்காயம் - 1/2 கிலோ
தக்காளி 1/2 கிலோ
பூண்டு
இஞ்சி
புதினா
கொத்தமல்லி
பட்டை
கிராம்பு
ஏலக்காய்
உப்பு
பச்சைமிளகாய்
பிரிஞ்சி இலை
மஞ்சள்தூள்

சிக்கன் பிரியான செய்யும் முற

குக்கரில் எண்ணெய் ஊற்றி அது நன்கு காய்ந்ததும்அதில் பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழிக்கறியை அதில் போட்டு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது தேவையான தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின்பு கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட்டு குக்கரை மூடவும்.

உங்கள் குக்கரில் அரிசி முக்கால் பாகம் வேகும் அளவிற்கு நேரத்தை கணித்துக் கொள்ளவும்.

அரிசி முக்கால் பாகம் வெந்ததும் குக்கரை திறந்து கிளறி, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும், வறுத்த முந்திரியை சேர்க்கவும்.

பிரியாணியின் மீது பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும், கொத்துமல்லி தழைகளையும் தூவி அலங்கரித்து பரிமாறவும். இணையாக தயிர்-வெங்கயா பச்சடியை சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

பிரியாணிக்கு நிறம் தேவையெனில் மசாலாவுடன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

நிறம் கலந்த அரிசி ஆங்காங்கே இருக்க வேண்டுமென்றால், கேசரிப் பொடியை தண்ணீரில் கலந்து அதை குக்கரை திறந்ததும் ஒரே இடத்தில் ஊற்றி பின் கிளறவும்.

சாதம் நன்கு உதிரி உதிரியாக வர ஊற வைக்கும் அரிசியில் சிறிது எண்ணெய் விட்டு ஊற வைக்கவும்.

இதில் மேலும் படிக்கவும் :  
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ப‌ல்சுவை

வீடுகளை சுத்தமாக வைக்க

வீட்டை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டு முடித்ததும் அந்த இடத்தை

வாங்க ருசிக்கலாம் சா‌க்லே‌ட் கே‌க்

முதலில் ச‌ர்‌க்கரையை ‌மி‌க்‌‌ஸி‌யி‌ல் போ‌ட்டு தூளாக அரை‌த்து‌க் கொ‌ள்ள வேண்டும். பின்னர் ...

அ‌ண்மை‌ச் செ‌ய்‌தி

பன்றிக் காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்புவது எப்படி?

பன்றிக் காய்ச்சல் பாதிக்காமல் தப்புவதற்கு, பொது இடங்களுக்கு அதிகம் செல்லாமல் வீட்டிலேயே ...

எளிதில் ஜீரணமாகும் இட்லி

பொதுவாக 8 மாத குழந்தைகள் தொடங்கி வயது முதிர்ந்தோர் வரை அனைவருக்குமே ஏற்றது இட்லி.

Widgets Magazine

ஆ‌சி‌ரிய‌ர் ப‌ரி‌ந்துரை

இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை அரசு நீக்கும் - நரேந்திர மோடி

இந்திய-அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில், இந்தியாவில் தொழில் தொடங்க தடையாக உள்ள நடைமுறைகளை ...

பிரபல கேலிச்சித்திரக் கலைஞர் ஆர்.கே.லக்ஷமண் காலமானார்

இந்தியாவின் முன்னணி கேலிச்சித்திரக் கலைஞர்களில் ஒருவரான ஆர்.கே.லக்ஷமண் சற்று நேரத்துக்கு முன்னர் ...

மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தில் விஷமிகள் ஊடுருவல்

இணையதளத் தாக்குதல் நடத்துபவர்கள் மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் ஊடுருவி, அதன் ...

போலி தொலைபேசி அழைப்பால் ஏமாற்றப்பட்டார் பிரிட்டிஷ் பிரதமர்

பிரிட்டனின் பிரதமர் டேவிட் கேமரன் போலி தொலைபேசி அழைப்பு ஒன்றால் ஏமாற்றப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு ...

Widgets Magazine
Widgets Magazine