கொத்துகறியை வாங்கி வந்து அதில் உருண்டைக் குழம்பு வைத்துப் பாருங்கள்.
உருண்டை செய்ய
துவரம் பருப்பு-1 கப் ஊளுத்தம் பருப்பு-1/4 கப் (சுமார் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.)
வேகவைத்த கைமா-1 கப் (நன்கு ப்ரஷர் குக்கரில் உப்பு போட்டு வேக வைத்தது)
விழுதாக அரைக்கவும்
காய்ந்த மிளகாய்-6-8 சீரகம்-2 டீஸ்பூன் இஞ்சி-1 பெரிய துண்டு
உருண்டை, கிரேவி இரண்டுக்கும்
பூண்டு-10 பல் சின்ன வெங்காயம்-1 கப்
கிரேவி செய்ய
உப்பு-தேவையான அளவு தக்காளி-1/4 கிலோ மிளகாய் பொடி-4-5 டீஸ்பூன் கறிவேப்பிலை-1 பிடி புளி-1 எலுமிச்சை அளவு
தாளிக்க
எண்ணெய்-1/4 கப் 1 டீஸ்பூன் கடுகு 1/2 டீஸ்பூன் வெந்தயம் 4 காய்ந்த மிளகாய் கறிவேப்பிலை முதலியவை 4 பட்டை 2 லவங்கம்.
உருண்டை தயாரிக்க செய்முறை
இஞ்சி, சீரகம், காய்ந்த மிளகாய் முதலியவைகளை மைய அரைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரைத்த விழுது முதலியன சேர்த்து, கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பூண்டு சேர்க்கவும். பின் கொத்துகறியையும் சேர்த்து, உருண்டைகளாகப் பிடித்து, ஆவியில் வைத்து எடுக்கவும்.
க்ரேவி செய்முறை
ஒரு கடாயை (வாணலியை) அடுப்பில் வைத்து எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை முதலியவை போட்டுத் தாளிக்கவும். கடுகு வெடித்ததும், சின்ன வெங்காயம், பூண்டு போட்டு வதக்கவும். பின், தக்காளி, மஞ்சள் பொடி, காரப் பொடி போட்டு வதக்கவும். இப்போது புளிக்கரைசல், உப்பு போட்டு சிறிதளவு தண்ணீரும் விட்டுக் கொதித்த பின் தயாராக வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு கொதிக்க விடவும்.
|