முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  அசைவம்
 
முட்டை புளிக்கறி
Webdunia
முட்டை புளிக்கறி செய்ய தேவையான பொருட்கள்

முட்டை - 4
புளி - ஒரு நெல்லிக்காய் அளவு
கடுகு - 1/2 ஸ்பூன்
எண்ணெய் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சின்ன வெங்காயம் - 10
மசாலா பொடி - 1 1/2

செய்முறை

1. முட்டையை நன்றாக அவித்து உரித்து ஊசியால் ஆங்காங்கே குத்தி வைக்கவும்.

2. சின்ன வெங்காயத்தை அரைத்து எடுக்கவும்.

3. பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, மசாலாப் பொடிகளைப் போட்டு ஒரு பிரட்டு பிரட்டவும்.

4. புளியை கரைத்து ஊற்றி, அரைத்த வெங்காயம் போட்டு, உப்பும் போடவும்.

5. குழம்பு கெட்டியானதும் முட்டையைப் போட்டு இரண்டு கொதி வந்ததும் இறக்கவும்.
மேலும்
முட்டைக் குழம்பு
மசாலா முட்டை ரோஸ்ட்
முட்டை கட்லெட்
முட்டை பக்கோடா
முட்டை உருளை மசாலா
முட்டை மசாலா