கமலாப் பழம்-6(ஜுஸ் எடுத்து ரெடியாக வைத்துக் கொள்ளவும்) முட்டை-2 பொடித்த சர்க்கரை-1 கப் பால்-2 கப் ப்ரெஷ் கிரீம்-2 கப் ஆரஞ்சு பழச் சுளைகள்-1 கப் ஆரஞ்சு எஸென்ஸ்-2 டீஸ்பூன் ஆரஞ்சு கலர்-1/2 டீஸ்பூன் ஜெலடின்-10 கிராம்.
செய்முறை
1) முட்டையை மஞ்சள் கரு தனியாகவும், முட்டை வெள்ளை தனியாகவும் பிரித்துக் கொள்ளவும்.
2) மஞ்சளையும் சர்க்கரையையும் சேர்த்து அடித்துக் கொள்ளவும். 3) அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க விடவும்.
4) மஞ்சள் கரு சர்க்கரை கலவையுடன், பாலும் சேர்த்து கொதிக்கும் தண்ணீர் இருக்கும் பாத்திரத்தில் வைக்கவும்.
5) கைவிடாமல் கிளறவும். அடுப்பைவிட்டோ, வெந்நீரை விட்டோ கீழே இறக்க வேண்டாம்.
6) பால் முட்டை எல்லாம் சேர்ந்து திக்காக சாஸ் மாதிரியான பதம் வரும் வரை கிளறவும்.
இப்போது அடுப்பிலிருந்து கீழே இறக்கி வைத்துப் பின் கிரீமைக் கொட்டி, நுபப ழநயவநசஆலேயோ அல்லது மத்தாலேயோ அடிக்கவும். பின் ஒரு டம்ளரில் ஜெலடினுடன் சிறிது வெந்நீர் சேர்த்துக் கலந்து பின் கொதிக்கும் நீர் இருக்கும் பாத்திரத்தில் இந்த டம்ளரை வைக்கவும். இப்படிக் கட்டியில்லாமல் கரைத்த ஜெலடினையும் முட்டை, சர்க்கரை பால் கிரீம் கலவையுடன் சேர்த்து அடித்துக் கடைசியில் ஆரஞ்சு கலர் ஆரஞ்சு எஸென்ஸ், ஆரஞ்சு பழத்துண்டுகள் எல்லாவற்றையும் கலந்து, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு, ப்ரிஜ்ஜில் சுமார் 4-6 மணி நேரம் வைத்து செட் செய்யவும்.
|