மைதா-250 மார்ஜரின் அல்லது வெண்ணெய் அல்லது வனஸ்பதி-120 பொடி செய்த சர்க்கரை-120 முட்டை-1/2(அடிக்க வேண்டும்) (இதை முட்டை போடாமலும் செய்யலாம்) வென்னிலா எஸென்ஸ்
செய்முறை
1) ஆரஞ்சு ஜாம் மிக்ஸர் ப்ரூட் ஜாம்-1/2 கப்
பிசைய சிறிதளவு பால் தேவையானால், தேவைக்கேற்ப, முதலில் வெண்ணெயையும் சர்க்கரையையும் நன்றாக நுரைக்க அடிக்க வேண்டும். எஸென்ஸ் சேர்த்து மீண்டும் அடிக்க வேண்டும். முட்டை சேர்ப்பவர்கள் இந்த நேரத்தில் முட்டை சேர்க்கவும். மைதாவை நன்றாக சலித்த பின் சிறிது சிறிதாக கலக்கவும். நன்றாக அப்பளம் போல் சுமார் 4" கனத்திற்கு இட்டு வட்ட வட்டமாக வெட்டவும். பிறகு மீண்டும் இதே வட்டத்தை வெட்டி அதனுள் சிறு வட்டங்களாக வெட்டவும். ஒரு பேகிங் தட்டில் வனஸ்பதி தடவி மைதாவை தூவி ரெடி செய்யவும்.
இப்போது வட்டவட்டமாக ரெடி செய்த பிஸ்கெட்டுகளையும் அந்த வட்டத்துள் சிறிய சிறிய வட்டமாக வெட்டிய பிஸ்கெட்டுகளையும் தனித்தனியாக பேக் செய்யவும். 180ஊயில் சுமார் 15 நிமிடம். பின் நாம் தயாராக வைத்திருக்கும் ஜாமை சிறிது சுடவைத்து நிரப்பவும்
|