முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  அசைவம்
 
மீன் மசாலா வறுவல்
Webdunia
தேவையான பொருட்கள் :

மீன் 200 கிராம்

வெங்காயம் 1

இஞ்சி 1/2 துண்டு

மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் 6

பூண்டு 3 பல்

வினிகர் 1/2 டீஸ்பூன்

பிரட்தூள் 50 கிராம்

உப்பு தேவையான அளவு

எண்ணெய் வறுக்கும் அளவு



செய்முறை :

மீனை நன்கு கழுவி, சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவைகளை உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த மசாலாவை மீனின் மேல் பிசிறி 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

நன்கு ஊறிய மீனை, பிரட் பவுடரில் பிரட்டி, நன்றாக எண்ணெயில் பொன்னிறமாக வறுக்கவும்.