சாதத்துடன் பிசைந்து கொள்ள கருவாட்டுக் குழம்பு(கிராம சமையல் பாரம்பரியமான தென்னிந்திய சமையல்)
புளி-1 எலுமிச்சை அளவு 100 கிராம் மொச்சைக் கொட்டை-பச்சைப் பயிறு அல்லது காய்ந்தது கத்தரிக்காய்-5 அல்லது 6 வெங்காயம்-100 கிராம் தக்காளி-100 கிராம் கருவாடு-100 கிராம் குழம்புப் பொடி-4 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு-2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய்-6 வெந்தயம்-1/2 டீஸ்பூன் பெருங்காயம்-1 டீஸ்பூன் பட்டை-2 கிராம்பு-4 எண்ணெய்-1/2 கப்
செய்முறை
ஒரு கனமான வாணலியில், எண்ணெயை காய வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும், தாளிப்பு சாமான்களை ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டுத் தாளிக்கவும்.
பின் வெங்காயம், தக்காளி போட்டு வதக்கிய பின், கத்தரிக்காய் மொச்சைக் கொட்டைடியையும் போட்டு வதக்கவும். பின் புளியையும் கரைத்து விட்டு, உப்பு, குழம்புப் பொடி போட்டுக் கொதிக்க விடவும்.
தளதளவென்று கொதி வந்தவுடன் நன்றாகக் கழுவிய கருவாட்டையும் போட்டுக் கொதிக்கவிட்டுப் பின் நன்றாக ஒரு சேர கொதித்தவுடன் பரிமாறவும்.
|