இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இந்திய வகைகள் » கத்தரிக்காய் ரசவாங்கி (Brinjal Kuzhambu)
Bookmark and Share Feedback Print
 
தேவையானவை

பிஞ்சுக் கத்தரிக்காய் - 15
மஞ்சள் தூள் - 1/4 தே‌க்கர‌ண்டி
கடலைப் பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
த‌னியா - 1 தே‌க்கர‌ண்டி
வெல்லம் - 1 தே‌க்கர‌ண்டி
எண்ணெய் - 3 தே‌க்கர‌ண்டி
கறிவேப்பிலை
புளி - எலுமிச்சை அளவு
உ பருப்பு - 1 தே‌க்கர‌ண்டி
மிளகாய் வற்றல் - 5
பெருங்காயத்தூள் - சிறிது
உப்பு - ‌சி‌றிது
கடுகு - 1/2 தே‌க்கர‌ண்டி

செ‌ய்முறை

கத்தரிக்காயைச் சிறு துண்டங்களாக நறுக்கவும்.

புளியை 1/4 லிட்டர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.

பருப்புகள், மிளகாய் வற்றல், த‌னியா ஆகியவற்றை வறு‌த்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும்.

கத்தரிக்காயை மஞ்சள் தூள், உப்பு, வெல்லம், புளித்த தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் வேக விடவும்.

அரை‌த்த பொடிகளைச் சேர்த்து மீண்டும் 3 அல்லது 4 நிமிடம் மூடிய நிலையில் வேக ‌விடவு‌ம்.

எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி, கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தா‌ளி‌த்து சே‌ர்‌த்து ப‌ரிமாறவு‌ம்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்