இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இந்திய வகைகள் » கார‌ச்ச‌ட்‌னி (Variety of chutney | Spiced chutney |)
Bookmark and Share Feedback Print
 
தேவையானவை

த‌க்கா‌ளி - 2
வெ‌ங்காய‌ம் - 3
உளு‌த்த‌ம் பரு‌ப்பு - அரை க‌ப்
கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் - 4
பு‌ளி - ப‌ட்டா‌ணி அளவு
உ‌ப்பு - ‌சி‌றிது
எ‌ண்ணெ‌‌ய் - 4 தே‌க்கர‌ண்டி
தா‌ளி‌க்க - கடுகு, க‌றிவே‌ப்‌பிலை

செ‌ய்யு‌ம் முறை

ஒரு வாண‌லியை அடு‌ப்‌பி‌ல் வை‌த்து எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி உளு‌த்த‌ம் பரு‌ப்பை பொ‌ன்‌னிறமாக வறு‌த்து ‌எடு‌‌க்கவு‌ம்.

அதே வாண‌லி‌யி‌ல் கா‌ய்‌ந்த ‌மிளகா‌ய் போ‌ட்டு வறு‌த்து எடு‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

பிறகு த‌க்கா‌ளி, வெ‌ங்காய‌த்தை பெ‌ரிய து‌ண்டுகளாக நறு‌க்‌கி‌ப் போ‌ட்டு எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி வத‌க்‌கி எடு‌க்கவு‌ம்.

இவ‌ற்றுட‌ன் பு‌ளி, உ‌ப்பு சே‌ர்‌த்து மைய அரை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கடுகு, க‌றிவே‌ப்‌பிலை‌ப் போ‌ட்டு‌த் தா‌ளி‌த்து ச‌ட்‌னி‌யி‌ல் ஊ‌ற்றவு‌ம். தோசை, இ‌ட்‌லி‌க்கு சுவையான கார‌ச் ச‌ட்‌னி தயா‌ர்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: காரச்சட்னி