கோதுமை ரவை இட்லி

திங்கள், 2 நவம்பர் 2009( 13:10 IST )
இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.
தேவையானவை
கோதுமை ரவை - 2 கப்
உளுத்தம் பருப்பு - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதல் நாள் மாலையில் இட்லிக்கு செய்வதைப் போல உளுந்தையும், கோதுமை ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள்.
உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள்.
இதனை ஒரு பாத்திரத்தில் வழித்து எடுத்து அதில் உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைக்கவும்.
மறுநாள் காலையில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். இதன் சுவை அலாதியாக இருக்கும்.