இந்திய வகைகள் | இனிப்புகள் | சைவம் | அசைவம் | சமைக்கத் தயாரா?
முதன்மை பக்கம் » இதர வாசிப்பு » அறுசுவை » இந்திய வகைகள் » வேப்பம் பூ பச்சடி (Neem Flower | Neem Flower Pachadi)
Feedback Print Bookmark and Share
 
வே‌ப்ப‌ம் பூ ‌கிடை‌ப்பதே அ‌ரிது. அதனை ப‌ச்சடி செ‌‌ய்து சா‌ப்‌பி‌ட்டீ‌ர்களானா‌ல் ‌விடவே மா‌ட்டீ‌ர்க‌ள்

தேவையான பொருட்கள்

வேப்பம்பூ - 2 தே‌க்கர‌ண்டி
புளி - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு பு‌ளி
உப்பு - தேவையான அளவு
கா‌ய்‌ந்த ‌மிளகாய் - 6
கடுகு - தா‌ளி‌க்க
கொஞ்சம் பெருங்காயம்
கொஞ்சம் கறிவேப்பிலை
வெல்லம் - நெ‌ல்‌லி‌க்கா‌ய் அளவு
எண்ணெய் - ‌சி‌றிது
அரிசி மாவு - 1 தே‌க்கர‌ண்டி

செய்முறை

வா‌ண‌‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி வேப்பம்பூவை கருகாமல் நல்ல கரும் சிவப்பாக வறுத்துப் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் தே‌க்கர‌ண்டி எண்ணெய் விட்டு, கடுகு, கிள்ளிய மிளகாய் வற்றல், பெருங்காயம், கறிவேப்பிலை, இவற்றைத் தாளிக்கவும்.

புளியைக் கரைத்து, ஒரு டம்ளருக்கு கூடுதலாக விட்டு, உப்பு போட்டு, நன்றாகக் கொதிக்கும்போது வெல்லத்தைப் போடவும்.

வெல்லம் கரைந்தவுடன் அரிசி மாவைக் கரைத்து விட்டு, சேர்ந்து கொதித்தபின் இறக்கவும். வேப்பம்பூ பொடியைப் போட்டு கலந்து பரிமாறவும்.
தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்
இதையும் தேடு: வேப்பம் பூ பச்சடி