கேரட் சாதம், பட்டாணி சாதம், பிரிஞ்சி சாதம் என்றெல்லாம் செய்து சலித்து விட்டதா? நெய் சாதம் செய்து பாருங்கள்.. ருசியுங்கள்.
எடுத்து வைத்துக் கொள்ள வேண்டியவை
பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ வெங்காயம் - 2 தக்காளி - 2 கேரட் - 1 உருளைக் கிழங்கு - 1 பட்டாணி - கால் கப் பீன்ஸ் - 3 நெய் - 50 கிராம் எண்ணெய் - தாளிக்க கருவேப்பிலை புதினா - 1 கட்டு உப்பு - தேவையான அளவு இஞ்சி- சிறிதளவு பூண்டு - முழுதாக 2 பச்சை மிளகாய் - 3 பட்டை, லவங்கம்
செய்யும் முறை
பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி, தண்ணீர் வடித்துவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம், கேரட், தக்காளி, உருளைக் கிழங்கு, பீன்ஸ் ஆகியவற்றை நன்கு பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
இஞ்சி, 2 பல் பூண்டு, பட்டை, லவங்கம், 2 பச்சை மிளகாய் அனைத்தையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், கேரட், உருளைக் கிழங்கு, பட்டாணி, 1 பச்சை மிளகாய், புதினா இலைகள், இஞ்சி, பூண்டு விழு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வதக்கவும். நன்கு வதக்கிய பின்பு தக்காளியையும் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் அரிசியைக் கொட்டவும். பின்னர் எடுத்து வைத்திருக்கும் நெய்யை ஊற்றவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி கிளறி விடவும்.
அடிக்கடியோ, வேகமாகவோ கிளறி விட வேண்டாம். அரிசி உடைந்துவிடும். எனவே கடைசியாக மூடும்போது மட்டும் ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடவும்.
சரியாக ஒரே ஒரு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடவும்.
5 நிமிடம் கழித்து குக்கரை திறந்து சுத்தம் செய்து வைத்திருக்கும் கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
குறிப்பு : மீல் மேக்கரை வாங்கி வெந்நீரில் போட்டு எடுத்து வதக்கும் போது சேர்த்துக் கொள்ளலாம்.
|