முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
மாதுள‌ம் பச்சடி  Search similar articles
தயிர் பச்சடி எ‌ன்றாலே எ‌ல்லோரு‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌ம். இ‌தி‌ல் மாதுளை ப‌ச்சடி எ‌ன்றா‌ல் எ‌ப்படி இரு‌க்கு‌ம். செ‌ட்டிநா‌ட்டு க‌ல்யாண‌ங்க‌ளிலோ அ‌ல்லது ‌உணவு ‌விடு‌திக‌ளிலோ இதனை ‌நீ‌ங்க‌ள் ரு‌சி‌த்‌திரு‌ப்‌பீ‌ர்க‌ள். கோடை‌க்கு‌ம் ‌சிற‌ந்தது. உடலு‌க்கு‌ம் ஏ‌ற்றது.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

மாதுளை பழ‌ம் - 1
தயிர் - ஒன்றரை கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவைக்கேற்ப

செ‌ய்யு‌ம் முறை

வெங்காயத்தை தோ‌ல் ‌நீ‌க்‌கி நீளவாக்கில் மெல்லியதாக நறுக்‌கி‌க் கொ‌ள்ளவும்.

பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும்.

வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து பிசறி வைத்துவிடவும்.

த‌யிரை ‌கி‌ண்ண‌த்‌தி‌ல் ஊ‌ற்‌றி ந‌ன்கு கல‌ந்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். அ‌தி‌ல் மே‌ற்கூ‌ரிய கலவைகளை சே‌ர்‌க்கவு‌ம்.

உணவு தயாரானது‌ம் சா‌ப்‌பிடு‌ம்போது இ‌ந்த த‌யி‌ர் ப‌ச்சடி‌யி‌ல் உ‌தி‌ர்‌த்து வை‌த்‌திரு‌க்கு‌ம் மாதுளை முத்துக்களையும் மேலாக‌த் தூ‌வி பரிமாறவும்.

மாதுளை மு‌த்து‌க்க‌ள் ந‌ன்கு ‌‌சிவ‌ந்து இரு‌ந்தா‌ல் த‌‌யிருட‌ன் கண்ணைக் கவரும் வ‌ண்ண‌த்‌தி‌ல் சுவையான த‌யி‌ர் ப‌ச்ச‌டியாக ஜொ‌லி‌க்கு‌ம்.
மேலும்
தே‌ங்கா‌ய் தோசை
பரு‌ப்பு ப‌ச்சடி
மா‌ங்கா‌ய் பரு‌ப்பு
பூரண‌‌ம் வை‌த்த பாக‌ற்கா‌ய்
காய்கறி ஊறுகாய்
தேங்காய் துவையல்