முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
காய்கறி ஊறுகாய்
மா‌ங்கா‌ய், நெ‌ல்‌லி‌க்கா‌ய் போ‌ன்று சுவையான ம‌ற்று‌ம் ச‌த்தான காய்கறி ஊறுகாய் செய்து பாரு‌ங்க‌ள். ‌வி‌‌த்‌தியாசமான சுவையுட‌ன் இரு‌க்கு‌ம்.

எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டியவை

கேரட் - 5 கிராம்
காலிபிளவர் - 1 ‌சி‌றியது
இஞ்சி - 200 கிராம்
பச்சை மிளகாய் - 10
எலுமிச்சங்காய் - 2
மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி
மஞ்சள்பொடி - அரை தேக்கரண்டி
க‌ல் உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 4 மேஜைக்கரண்டி

செ‌ய்யு‌ம் முறை

காய்களையும் எலுமிச்சம்பழத்தையும் ந‌ன்கு சு‌த்த‌ம் செ‌ய்து சிறு துண்டுகளாக நறு‌க்கிக் கொள்ளவும்.

அத்துடன் மிளகாயை ‌நீள வா‌க்‌கி‌ல் அரிந்து கா‌ய்க‌றிகளுட‌ன் போட்டு ஒன்று கலந்து ஜாடியில் போட்டுக் கொள்ளவும்.

அ‌தி‌ல் உப்பு, பெருங்காயம், மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி அனைத்தையும் போட்டு நன்றாகக் குலுக்கி ஊறவைத்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

எண்ணெயைக் காய்ச்சி (தேவையெ‌ன்றா‌ல் கடுகு போ‌ட்டு‌த் தா‌ளி‌த்து) ஆற வை‌த்து மசாலா‌வி‌ல் ஊ‌றிய கா‌‌யி‌ல் ஊ‌ற்றவு‌ம்.

சுவையான கா‌ய்க‌றி ஊறுகா‌ய் தயா‌ர். ஒரு ‌சில நா‌ட்க‌ள் வெ‌யி‌லி‌ல் காய வை‌த்து எடு‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.
மேலும்
தேங்காய் துவையல்
உடைத்த கடலை துவையல்
புதினா துவையல்
கலப்பு துவையல்
கொத்து மல்லி துவையல்
கடலைப் பருப்பு துவையல்