காரக்குழம்பு போன்ற காரமான உணவு வகைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த உடைத்த கடலை துவையலைப் பயன்படுத்தலாம்.
தேவையானப் பொருட்கள்
உடைத்த கடலை தேங்காய் பச்சை மிளகாய் உப்பு இஞ்சி
செய் முறை
அம்மியில் அல்லது மிக்சியில் முதலில் தேங்காயை போட்டு அதிகம் தண்ணீர் விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
அதில் உடைத்த கடலை, உப்பு, சிறிது இஞ்சி, பச்சை மிளகாய் போட்டு அரைக்கவும்.
கொஞ்சம் மட்டுமே தண்ணீர் விட்டு விழுது போல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.
தாளிக்கவும் வேண்டாம். அப்படியே உணவிற்குப் பயன்படுத்தலாம்.
இதன் ருசி பலருக்கும் பிடிக்கும்.
|