உடலுக்கு நல்ல கொத்து மல்லித் துவையல் செய்து பாராட்டைப் பெறுங்கள்.
தேவையான பொருட்கள்
கொத்துமல்லி 2 கட்டு காய்ந்த மிளகாய் உளுந்து பெருங்காயம் உப்பு புளி
செய்முறை
கொத்துமல்லி தழைகளை நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் விட்டு உளுந்து, காய்ந்த மிளகாயை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அந்த வாணலியை அடுப்பில் இருந்து இறக்கி, சூடு அடங்குவதற்குள் கொத்துமல்லியையும் போட்டு லேசாக வதக்கிக் கொள்ளவும்.
பின்னர் மிக்சி அல்லது அம்மியில் வைத்து அரைக்கவும். அத்துடன் உப்பு, புளி, பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
ஜீரண சக்தியைத் தூண்டும் கொத்து மல்லி துவையல் தயார்.
|