இன்று கடலைப் பருப்புத் துவையல் செய்து பார்க்கலாமா?
தேவையானப் பொருட்கள்
கடலைப் பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயம் எண்ணெய் தேங்காய் உப்பு
தாளிக்க
கடுகு எண்ணெய் மிளகாய், உளுந்து
கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாயை வாணலியில் எண்ணெய் விட்டு சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும்.
மிக்சியில் அல்லது அம்மியில் தேங்காயை அரைத்துப் பின்னர் கடலைப்பருப்பு, மிளகாய், உப்பு, பெருங்காயம் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உடைத்த உளுந்து, கருவேப்பிலை, பெருங்காயத் தூள் போட்டு தாளித்து துவையலில் கொட்டவும்.
பிடித்தவர்கள் துவையலை நரநரவென அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
|