முதன்மை பக்கம் > இதர வாசிப்புக்கு > அறுசுவை > இந்திய வகைகள்
ஆலோசனைகள் / கருத்துக்கள்நண்பருக்கு அனுப்பபிரதி எடுக்க
 
பூண்டு துவையல்
இ‌ந்த வார‌ம் முழுவது‌ம் துவைய‌ல் வகைகளை‌ செ‌ய்து பா‌ர்‌க்க‌ப் போ‌கிறோ‌ம். துவ‌க்கமாக பூ‌ண்டு துவைய‌ல் செ‌ய்யு‌ம் முறை.

தேவையானப் பொருட்கள

10 பல்லு பூண்டு

2 காய்ந்த மிளகாய்

தேங்காய் ஒரு சில துண்டுகள்

கால் கோப்பை உடைத்த கடலை

பட்டாணி அளவிற்கு புளி

உப்பு

செய்முறை :


அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு அதில் காய்ந்த மிளகாயை போட்டு சிவக்க எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மிக்ஸியில் தேங்காயை நன்கு அரைத்துக் கொண்டு பின்னர் அதில் பூண்டு, மிளகாய், உடைத்த கடலை, சிறிதளவு புளி ஆகியவற்றைப் போட்டு நன்கு அரைக்கவும். தேவையான அளவிற்கு உப்பையும் சேர்த்துக் கொள்ளவும்.

சுவையான உடலுக்குத் தேவையான பூண்டு துவையல் தயார்.

இதில் புளிக்கு பதிலாக புளிக்கரைசலையும் சேர்த்துக் கொள்ளலாம்.
மேலும்
த‌ண்‌ணீ‌ர் ‌விடாம‌ல் தக்காளி தொக்கு
சா‌க்லே‌ட் கே‌க்
வென்னிலா கேக்
அடை
சில சமையலறை கு‌றி‌ப்புக‌ள்
சமையல் அளவுகள் அட்டவணை