ப்ரூட் கோன்ஸ்
ப்ரூட் கோன்ஸ் செய்ய தேவையான பொருட்கள்
அன்னாசிப் பழம் - 1/2 கப்
மாம்பழம் - 1/2 கப்
திராட்சை பழம் - 100 கிராம்
வாழைப்பழம் - 1 கப்
மாதுளம் பழம் - 1/2 கப்
பேரீச்சம் பழம் ( விதையில்லாதது ) - 1/2 கப்
தேன் - 100 மிலி
ஜெலட்டின் - 2 டீஸ்பூன்
சிட்ரிக் ஆசிட் - 1/4 டீஸ்பூன்
சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்
மில்க் மெய்ட் - 200 கிராம்
முந்திரிப் பருப்பு - 50 கிராம்
ரோஸ் எசன்ஸ் - சில துளிகள்
டூட்டி ப்ரூட்டி - 50 கிராம்
செர்ரி பழம் - 50 கிராம்
கோன் செய்வதற்கு
மைதா மாவு - 200 கிராம்
உப்பு - 1 சிட்டிகை
சோடா உப்பு - 1 சிட்டிகை
அரிசி மாவு - 50 கிராம்
பொரித்தெடுக்க எண்ணெய் - 250 கிராம்
செய்முறை
முதலில் மைதா மாவை நன்றாக சலித்து அரிசி மாவு, உப்பு, சமையல் சோடா சேர்த்து தண்ணீர் விட்டுப் பிசைந்து பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும். ஊறிய மாவை உருண்டைகளாக்கி சப்பாத்தி போல் இட்டுக் கொள்ளவும். சப்பாத்தி ஓரளவு பெரியதாக இருக்க வேண்டும். அப்பொழுது தான் கோன் செய்ய முடியும்.
ஒரு சப்பாத்தியை பாதியாக வெட்டி எடுத்து அதை கோன் போல் செய்து அதன் ஓரங்களை ஒட்டி விடவும்.
வாணலியில் எண்ணெய் வைத்துக் காய்ந்தவுடன் கோன்களை பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். கோன்கள் கரகரப்பாக இருக்க வேண்டும்.
மேலே கூறியுள்ள பழத்தை அனைத்தையும் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பேரிச்சம் பழத்தை மட்டும் சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஜெலட்டின் சர்க்கரை, சிட்ரிக் ஆசிட் இவற்றைத் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து ஜெலட்டின் கரைந்ததும் இறக்கி விடவும். ஜெலட்டின் கலவை ஓரளவு ஆறியவுடன் தேன், மில்க் மெய்ட், முந்திரிப் பருப்பு பொடியாக நறுக்கியது, ரோஸ் எசன்ஸ் போன்றவற்றைக் கலக்கவும். இப்பொழுது ப்ரூட் கலவை ரெடி. இந்தக் கலவையை அப்படியே ஒரு மணி நேரம் ப்ரிஜ்ஜில் வைக்கவும்.
பரிமாறும் சமயம் கோனில் ப்ரூட் கலவையை நிரப்பி மேலே டூட்டி ப்ரூட்டி தூவி நடுவில் செர்ரி பழம் செருகி பரிமாறவும்.