ஸ்ட்ராபரிடிலைட்
ஸ்ட்ராபரிடிலைட் செய்ய தேவையான பொருட்கள்
சர்க்கரை சேர்த்த கோவா - 250 கிராம்
சிவப்பு - 2 துளி
காய்ச்சி ஆடை எடுத்த பால் - 1 லிட்டர்
ஐசிஸ் சர்க்கரை - 50 கிராம்
பிஸ்தா - 25 கிராம்
கோகோ பவுடர் - 25 கிராம்
வெண்ணெய் - 25 கிராம்
ரோஜாப்பூவின் காம்புகள் - 15
ஸ்ட்ராபரி எசன்ஸ் - சில துளிகள்
செய்முறை
பாலை கொதிக்க விடவும். அதில் ஒரு டீஸ்பூன் வினிகர் அல்லது எலுமிச்சம் பழச் சாறு சேர்த்தால் பாகு திரிந்து விடும். அதை உடன் ஒரு மெல்லிய வெள்ளைத் துணியில் வடிகட்டி உடன் ஐஸ் தண்ணீரில் 3, 4 முறை முக்கி தண்ணியை பிழிந்து எடுக்கவும். இதில் ஐசிங் சர்க்கரை, ஸ்ட்ராபரி எசன்ஸ் சேர்த்து நன்றாகப் பிசையவும். மிக்ஸியில் 2, 3 சுற்று விட்டு எடுக்கவும். இதை 25 உருண்டைகளாக பண்ணவும்.
கோகோ பவுடர், வெண்ணெய், 4 டீஸ்பூன் சர்க்கரை கனமான பாத்திரத்தில் கொதிக்க விடவும். வெண்ணெய் உருகி எல்லாமாக சேர்ந்து உருண்டு திரண்டு வரும் சமயம் இறக்கி விடவும். இதில் பிஸ்தாக்களை சேர்த்துக் கலக்கவும். பிறகு ஒவ்வொரு பிஸ்தாவாக எடுத்துத் தட்டில் வைத்து ஆற விடவும். இது பிஸ்தா கோகோ மாதிரி ஆகும்.
மேல் எழும்பிய பனீர் உருண்டைகளுக்கு நடுவில் ஒவ்வொரு பிஸ்தா வைத்து மூடவும். இவ்வாறு எல்லாவற்றையும் செய்து தட்டில் வைத்து மெல்லிய துணியால் மூடி, 5 நிமிடம் ஸ்டீம் செய்யவும். நன்றாக ஆற விடவும்.
கோவாவில் சிவப்புக் கலர் சேர்த்து நன்றாக நைஸாகப் பிசையவும். இதையும் 25 உருண்டைகள் செய்து கொள்ளவும். ஒவ்வொரு கோவா உருண்டைகளை எடுத்து பூரண கொழுக்கட்டைக்குக் கப் செய்வது போல் செய்து, பனீர் உருண்டைகளை வைத்து மூடி, ஸ்ட்ராபெரி பழம் போல் ஷேப் தரவும். ரோஜா காம்புகளில் டூத் பிரிக் ( Tooth Prick ) மெதுவாக நுழைந்து பழத்தின் நடுவில் சொருகவும. கசகசாவை சிறிது வறுத்து லேசாக பழத்தின் மேல் தூவினால் ஸ்ட்ராபரி பழத்தின் மேல் இருக்கும் சிறிய முள் மாதிரி தெரியும்.