தேவையான பொருட்கள் :
காலிபிளவர் 1 உரித்த பட்டாணி 1/2கப் வெங்காயம் 3 (பொடிப் பொடியாக நறுக்கவும்) தக்காளிப் பழம் 3 (பொடிப் பொடியாக நறுக்கவும்) பச்சை மிளகாய் 6 (பொடிப் பொடியாக நறுக்கவும்) அரிசி நொய் 1 கப் தயிர் 3 டேபிள் ஸ்பூன் கடுகு 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு 1/2ஸ்பூன் மசாலா பவுடர் 1/2ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2ஸ்பூன் கறிவேப்பிலை சிறிதளவு உப்பு தேவைக்கேற்ப எண்ணெய் 50 கிராம்
செய்முறை :
1. காலிபிளவரை தூளாகச் செய்து கொண்டு அதை சிறிதளவு உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடங்கள் போட்டு வைக்கவும்.
2. வாணலியை அடுப்பிலேற்றி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு, அது சூடானதும் கடுகைப் போடவும்.
3. கடுகு வெடித்ததும், உளுத்தம் பருப்பை அதில் போட்டு, கறிவேப்பிலையையும் போடவும்.
4. உளுத்தம்பருப்பு பொன் நிறமானதும் வாணலியில் அரிசி நொய்யைப் போட்டு சிறிது நேரம் வறுத்து அந்நொய்யைத் தனியாக எடுத்து வைக்கவும்.
5. மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி, வெங்காயம், பச்சை மிளகாயை அதில் போட்டு சிறிது வதக்கி, பின் அதனோடு தக்காளி, காலிபிளவர், பட்டாணி, தேவையான அளவு உப்பையும் சேர்த்துச் சிறிது நேரம் வதக்கவும்.
6. பிறகு வறுத்த நொய், தயிர், மசாலா பவுடர், மஞ்சள் பொடி மற்றும் 2கப் தண்ணீர் ஆகியவைகளைச் சேர்க்கவும்.
7. அக்கலவையை மிதமான சூட்டில் நன்றாக வெந்து பக்குவமாகும் வரைக் கரண்டியால் கலக்கவும்.
காலி பிளவர் பட்டாணி பாத் ரெடி
|