முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
பயிறு பாத்
Webdunia
தேவையான பொருட்கள்

பச்சைப் பயிறு - 1 கப்
பச்சை அரிசி - 1 கப்
வெங்காயம் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
தக்காளிப் பழம் -4
பச்சை மிளகாய் - 7
கொத்தமல்லி - கொஞ்சம் (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)
பட்டை - 1 துண்டு
கிராம்பு - 4
ரீபைண்ட் ஆயில் - 6 ஸ்பூன்
மிளகு, சீரகத்தூள் - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 ஸ்பூன்
தண்ணீர் - 5 கப்

செய்முறை:-

1. அரிசியையும் பயிறையும் களைத்து 5 கப் தண்ணீரில் போட்டு வைக்கவும்.

2. வாணலியில் எண்ணெய் ஊற்றி, பட்டை, கிராம்பு போட்டு வறுக்கவும்.

3. நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு போட்டு வதக்கவும்.

4. வெங்காயம், தக்காளி சுருள வதங்கிய பிறகு ஊற வைத்த அரிசி, பயிறை சேர்க்கவும்.

5. மேலே கூறிய கவவையை குக்கரில் 10 நிமிட நேரம் வேக வைத்து இறக்கவும்.

பயிறு பாத் தயார்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை