தேவையான பொருட்கள் :
பச்சரிசி - 100 கிராம் பால் - 100 மி.லி. நெய் - 50 கிராம் கற்கண்டு - 100 கிராம் உலர்ந்த திராட்சை - 15 கிராம் முந்திரி - 15 கிராம் ஏலக்காய்த் தூள் - ஙு தேக்கரண்டி
செய்முறை: அரிசியை நன்கு கழுவி 1/2 மணி நேரம் தண்ணீரில் ஊறிய பிறகு 200 மி.லி. கொதிக்கும் தண்ணீரில் போட்டு வேக விடவும். தண்ணீர் சுண்டிய பின் பால் ஊற்றவும். பால் சுண்டி அரிசி கூழாக வெந்தபின் ஒரு 15 கிராம் நெய் கலந்து பிறகு கல்கண்டைக் கலக்கவும். 10 நிமிடம் சிறு தீயில் கொதித்த பின் இறக்கி ஏலக்காய்த் தூளைக் கலக்கவும். மீதி நெய்யை நன்கு காய வைத்து திராட்சை, முந்திரியை நெய்யில் வறுத்து, நெய்யோடு கல்கண்டு பாத்தில் கலக்கவும்.
|