தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் - 1 1/2 கிலோ அரிசி - 2 லிட்டர் உளுத்தம்பருப்பு - 2 மேஜைக்கரண்டி மிளகாய் - 35 கிராம் கடலைப்பருப்பு - 4 மேஜைக்கரண்டி கடுகு - 3 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு - 35 கிராம் உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - 4 சிட்டிகை (பொடி) எண்ணெய் - 250 கிராம் நெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை
சாதத்தை வேக வைத்து வடித்துக் கொண்டு கத்திரிப் பிஞ்சை பொடியாக நறுக்கி, கழுவி வைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் இவற்றை சிவக்க வறுத்துக் கொண்டு, பெருங்காயத்தை பொரித்து எடுத்து இவைகளையெல்லாம் பொடி செய்து வேண்டிய அளவு உப்பையும் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய்யில் முந்திரிப் பருப்பை ஒடித்துப் போட்டு வறுத்து எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் தாராளமாக எண்ணையை விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கத்திரித் துண்டை கொட்டி பாக்களவு புளியை நீரில் கரைத்து பிசறி, நன்றாக வதக்கி, அதனுடன் வறுத்த முந்திரிப் பருப்பை போட்டு நன்றாகக் கிளறிக் கொட்டி அரைத்த பொடியையும் போட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். ஒரு மூடி தேங்காய்த் துருவலை எண்ணெயில் வறுத்து, சாதத்தில் போடவும்.
|