முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
மாங்காய் சாதம்
Webdunia
தேவையான பொருட்கள்:

மாங்காய் துருவியது 1 கப்
தேங்காய் துருவியது 1/2 கப்
பொட்டுக் கடலை 1/4 கப்
வறுத்த வேர்க்கடலை 1/4 கப்
கேரட் துருவியது 1/2 கப்
குடமிளகாய் நறுக்கியது 1/2 கப்
வெங்காயம் நறுக்கியது 1/2 கப்
தக்காளி பொடியாக நறுக்கியது 1 கப்
பழுக்காத கொய்யா 1 நறுக்கியது
முந்திரி பருப்பு 1 டேபிள் ஸ்பூன்
திராட்சை 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுப் பொடி தேவைக்கேற்றபடி

செய்முறை

ஒரு டம்ளர் அரிசி எடுத்து உதிரியாக சாதம் செய்து கொள்ளவும். பண்ணவும். பெரிய தட்டில் போட்டு சாதத்தை பரத்தி போட்டு வைக்கவும், துருவின மாங்காய், தேங்காய், கேரட்டை அதில் போடவும். பிறகு பொட்டுக் கடலை, வறுத்த வேர்க்கடலை, நறுக்கி வைத்த கொய்யா எல்லாவற்றையும் போடவும். பிறகு நெய்யில் வெங்காயம், தக்காளி, குடமிளகாய், முந்திரி, திராட்சை எல்லாவற்றையும் வதக்கி சாதத்தில் போடவும். கடைசியாக உப்பு, மிளகுப் பொடி போட்டு எல்லாவற்றையும் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும். சேர்த்து கலக்கிய பிறகு பொடியாக நறுக்கிய கொத்துமல்லி போடவும்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை