முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
தேங்காய்ப் பால் சாதம்
Webdunia
தேவையான பொருட்கள்

முற்றிய தேங்காய் 1
பச்சரிசி 1 கப்
உ.பருப்பு 1 ஸ்பூன்
மோர் மிளகாய் 2
பெருங்காய தூள் சிறிது
அப்பளம் 2
உப்பு தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் 1 கரண்டி

செய்முறை

அரிசியைக் களைந்து 1/2 மணி வடிய விடவும்.

தேங்காயை துருவி, ஒரு ஸ்பூன் அரிசி சேர்த்து 2 கப் அளவு பால் எடுக்கவும்.

வடிய விட்டிருக்கும் அரிசியுடன், தேங்காய் பாலை சேர்த்து, குக்கரில் சாதம் வடிக்கவும்.

சாதத்தை வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு ஆற விடவும்.
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், மோர் மிளகாய் தூள் முதலியவை தாளித்து கொட்டவும்.

அப்பளத்தை பொரித்து, பொடித்து போடவும்.

ஆறிய சாதத்துடன், தாளித்தவைகளையும், பொடித்த அப்பளத்தையும் சேர்த்து பரிமாறவும்.
மேலும்
ப்ரைட் ரைஸ்
தேங்காய் சாதம்
முட்டைக்கோஸ் சாதம்
விருந்தோம்பல் - வெஜிடபிள் புலாவ்
புளியோதரை (புளியஞ்சாதம்)
எலுமிச்சம்பழ சாதம்