முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
தேங்காய் சாதம்
Webdunia
தேவையான பொருட்கள்

அரிசி 1 கிலோ
தேங்காய் 1/2
கடலை பருப்பு 5 கிராம்
உளுத்தம் பருப்பு 5 கிராம்
கடுகு 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் 2
முந்திரி பருப்பு 10
தேங்காய் எண்ணெய் 50 மி.கி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை

அரிசியை சுத்தம் செய்து வடித்துக் கொள்ளவும்.

தேங்காயைப் பூவாக துருவிக் கொள்ளவும்.

எண்ணெயில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய் பெருங்காயம் முதலியன வறுத்துக் கொள்ளவும். தேங்காய் பூவையும் நன்கு வறுத்துக் கறிவேப்பிலையையும் போடவும்.

வடித்த சாதத்தை பரத்தி, வறுத்த பொருட்கள் அனைத்தையும் கொட்டி ஒன்று சேர கிளறி இறக்கவும்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை