முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
முட்டைக்கோஸ் சாதம்
Webdunia
தேவையான பொருட்கள் :

அரிசி 2 கோப்பை
துருவிய தேங்காய் 1 மூடி
வெங்காயம் 1 (மெல்லியதாக நறுக்கியது )
முட்டைக் கோஸ் 2 கோப்பை (துருவியது)
பச்சைப் பட்டாணி கோப்பை
கரம் மசாலாத்தூள் 2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
பட்டை 2 (சிறியது)
கிராம்பு 2
ஏலக்காய் 2
எலுமிச்சை 1 ( சாறு எடுத்துக் கொள்ளவும். )
எண்ணெய் 5 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

விழுதாக அரைத்துக் கொள்ள :

பச்சை மிளகாய் 5
பூண்டு 6 பற்கள்
இஞ்சி 1 சிறியதுண்டு

செய்முறை :

பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைகளைத் தாளிக்கவும்.


வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.


இத்துடன் கழுவிக் களைந்து வைத்த அரிசி, துருவிய தேங்காய், முட்டைக்கோஸ், உரித்த பட்டாணி, கரம் மசாலாத்தூள், மிளகாய், மஞ்சள்தூள், அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.


அரிசி வேக வைக்கத் தேவையான அளவு தண்ணீர்விட்டு வேகவிடவும்.


அவ்வப்பொழுது இதைக் கிளறிவிடவும்.


அரிசி வெந்தவுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கிளறவும்.


அடுப்பிலிருந்து இறக்கிச் சூடாகப் பரிமாறவும்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை