முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
விருந்தோம்பல் - வெஜிடபிள் புலாவ்
Webdunia
1. அரிசியைக் களைந்து உறவைக்கவும்.

2. வெண்ணையை லேசாக உருக்கி, சோம்பு, ஏலக்காய் பட்டை கிராம்பு முதலியவை தாளிக்கவும்.

3. ஊறவைத்த அரிசியைப் போட்டு, வாசனைவரும் வரை லேசாக வறுக்கவும். கலர் ப்ரௌன் ஆகக் கூடாது.

4. உடனே இருமடங்கு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து மூடி வைக்கவும். முதலில் தீயைப் பெரியதாக வைக்கலாம். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், தீயைக் குறைத்து வைக்க வேண்டும்.

அடுத்ததாக காய்கறிகளைக் கவனிப்போம்

1. அடுப்பில் ஒரு கடாயை ஏற்றி சிறிதளவு எண்ணெய் (2 மேஜைக்கரண்டி) ஊற்றி சீரகம் அல்லது சோம்பு தாளிக்கவும்.

2. நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. இதற்குள் காரட் பீன்ஸை குக்கரில் ஆவியில் வைத்து எடுக்கவும். இவ்வாறு செய்வதால் காய்கறிகளின் சத்து வீணாகாமல், குழையாமல், கலர் மாறாமல் இருக்கும்.

4. வெங்காயம் வதங்கிய பிறகு, குடமிளகாய், பட்டாணி, காலிப்ளவர் போட்டு நன்கு வதக்கவும்.

5. நிறம் மாறாமல், மிருதுவாக ஆன பின் காரட், பீன்ஸ் போட்டுப்பின் பொடி வகைகளையும் போட்டு வதக்கவும். அதிகம் வதக்கத் தேவையில்லை.

6. கடைசியில் தக்காளி சேர்த்து வதக்கி, உப்புப் போட்டு பின் கீழே இறக்கி வைக்கவும்.

7. இப்போது தயாராகக் கலந்த சாதத்தையும், காய்கறிகளையும் ஒரு பெரிய தட்டில், மாறிமாறிப் பரப்பி கலக்கவும்.

8. நன்கு கலந்த பின் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியைக் கலந்து வைக்கவும்.
மேலும்
தயிர் ரொட்டி தோசை
புது முறையில் பஜ்ஜி
எழும்பல் அப்பம்
குழி பணியாரம்
மங்களூர் போண்டா
அவல் புளியோதரை