தேவையான பொருட்கள்
எலுமிச்சம் பழம்-4(பெரிய சைஸ்) கடுகு-1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு-1 டீஸ்பூன் கடலைப் பருப்பு-1 டீஸ்பூன் கறிவேப்பிலை-1 பிடி பச்சை மிளகாய்-6 மஞ்சள் பொடி-1 டீஸ்பூன் வடித்த சாதம்-4 கப் தாளிக்க எண்ணெய்-1/4 கப்
செய்முறை
அரிசியை குழைய வடிக்காமல் சிறிது தண்ணீரைக் குறைத்துக் கொண்டு வடித்தால் பொலபொலவென்று உதிரியாக வரும். ஒரு தட்டில் சூடாக இருக்கும் போதே கொட்டி, நன்றாகப் பரப்பி, 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு ஆற வைத்தால், ஒன்றேடொன்று ஒட்டாமலும் உதிரியாகவும் இருக்கும்.
அடுப்பில் எண்ணெயைச் சூடாக்கி, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு போட்டு, கடுகு வெடித்து, பருப்பு சிவந்தவுடன் நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை முதலியவற்றைப் போட்டு மஞ்சள் பொடி சேர்த்து உடனே கீழே இறக்கி விடவும். பெருங்காயம் தேவையில்லை. பரப்பிய சாதத்தின் மேல் கொட்டிக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து எலுமிச்சம்பழ சாற்றைக் கலந்து சிறிது நேரம் கழித்துப் பசியாறினால் உப்பு, உரைப்பு, புளிப்பு எல்லாம் சாதத்துடன் சரியாகக் கலந்திருக்கும். ஆறி தான் சாப்பிட வேண்டுமென்பதால், தயார் பண்ணி விட்டு எங்கேயேனும் ளாடியீயீiபே போய் விட்டு வந்தால் சுட வைக்க அவசியமில்லாமல் டக்கென்று சாப்பிடலாம்.
|