தேவையான பொருட்கள்
பயத்தம் பருப்பு-1/4 கப் கடலைப் பருப்பு-1/4 கப் பச்சரிசி-1 கப் வெல்லம்-11/2 கப்(2 கப்) பால்-1 லிட்டர் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், நெய், முந்திரி பருப்பு-தேவையான அளவு நெய் நிறைய விட்டால் மிகவும் ருசியாக இருக்கும்.
செய்முறை:
பயத்தம் பருப்பை சிறிதளவு நெய்யில் வறுத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பையும், பயத்தம்பருப்பையும் அரிசியுடன் சேர்த்துக் களைந்து இருமடங்கு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். பாதி வெல்லத்தை சிறிதளவு நீரில் கரைத்து சிறிதளவு கொதிக்க வைத்து, வேகும் அரிசி பருப்புக் கலவையில் விடவும்.
எல்லாம் சேர்ந்து ஒன்று சேரக் கொதித்து, வெல்ல வாசனை நீங்கி, அரிசி வெந்து வந்தபின், நெய், ஏலக்காய்பொடி, நெய்யில் வறுத்த முந்திரி பருப்பு சேர்த்துக் கலக்கி, சுடச்சுடப் பரிமாறவும் (அரிசி வேக வேக தேவையானால் இன்னும் கொஞ்சம் பால் விடலாம்).
|