முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
அவல் புளியோதரை
Webdunia
தேவையான பொருட்கள் :

அவல் 250 கிராம்
நல்லெண்ணெய் 100 கிராம்
புளி எலுமிச்சம்பழ அளவு
மிளகாய் வற்றல் 3
கடுகு 1 டீஸ்பூன்
( தாளிக்க )
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன் ( தாளிக்க )
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
( தாளிக்க )
பச்சை மிளகாய் 6 ( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
இஞ்சி ஒரு சிறிய துண்டு
( பொடியாக நறுக்கிக் கொள்ளவும் )
கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி 2 சிட்டிகை
பெருங்காயம் கொஞ்சம்
உப்பு தேவைக்கேற்ப

செþய்முறைþ þ:

அவலை நன்றாக சுத்தம் செய்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும்.


புளியை ஊறப் போட்டு, 2 டம்ளர் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.


ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்கவும். தாளிப்பு வந்தவுடன் இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலையையும் போட்டுக் கிளறி கரைத்தப் புளி தண்ணீரையும், மஞ்சள் பொடி, உப்பையும் தாளிப்பில் சேர்த்து கொதிக்கவிடவும். பெருங்காயத்தையும் போடவும்.


சுமார் 3 நிமிடம் வரை புளித்தண்ணீர் கொதித்தும், பிழிந்து வைத்திருக்கும் அவலை தாளிப்பில் கொட்டிக் கிளறவும்.


சிறிய தீயில் கிளறி மேல் சுண்டியவுடன் கீழே இறக்கி பரிமாறவும்.
மேலும்
க்ரிஸ்ப்பி பொட்டேடோ
மெது ரொட்டி
மிக்ஸெட் கலக்கல்
ராஜ இட்லி
ரவை பழ புட்டு
தேங்காய் பொங்கல்