முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
க்ரிஸ்ப்பி பொட்டேடோ
Webdunia
உருளைக்கிழங்கு - - 2 (பெரியது)

பூண்டு - 10 பற்கள்

பெரிய வெங்காயம் - 1

இஞ்சி - தேவையான அளவு

சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன்

அஜினோமோட்டோ (சைனீஸ் உப்பு) - ஒரு சிட்டிகை

பச்சை மிளகாய் - 4

மிளகாய்த் தூள் பசை - ஒரு தேக்கரண்டி

சர்க்கரை - - 1/2 தேக்கரண்டி

மக்காச்சோள மாவு - 2 மேஜைக்கரண்டி

மைதா மாவு - 2மேஜைக்கரண்டி

முட்டை - 1(அடித்தது)

உப்பு - தேவையான அளவு



உருளைக்கிழங்கைத் தோல் நீக்கி நீளவாக்கில், விரலளவு வெட்டிக் கொள்ளவும்.


இதனுடன் மைதா, மக்காச்சோள மாவு, அடித்த முட்டை கலந்து பிசிறிக் கொள் கொள்ளவும்.


இதை எண்ணெயில் போட்டு சிவந்த நிறமாக மாறும் வரை பொரித்தெடுக்கவும்.


வாணலியில் எண்ணெய் விட்டு, பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம், இஞ்சி போட்டு வதக்கவும்.


சோயா சாஸ், அஜினோமோட்டோ, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.


வதங்கியதும் சர்க்கரை போட்டு இரண்டு பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப் போட்டு வதக்கவும்.


இறுதியாக ஏற்கனவே பொரித்தெடுத்த உருளைக்கிழங்கைப் போட்டு வதக்குங்கள்.


இதன்மேல் ஸ்பிரிங் ஆனியன் தூவினால் சுவை அதிகரிக்கும்.