தேவையான பொருட்கள் :
மைதா - ஙூ கப்
மெல்லிய ரவை - ஙூ கப்
அரிசி மாவு - ஙூ கப்
உப்பு - ஙூ தேக்கரண்டி
நல்லெண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 2 கப்
செய்முறை :
மைதா, ரவை, அரிசி மாவு மூன்றையும் ஒன்றாகக் கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அத்துடன் உப்பு, ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கவும்.
நன்றாகக் கொதித்து வரும்போது மத்தியில் மாவைக் கொட்டி, கரண்டியைச் சொறுகி, 10 நிமிடங்கள் மூடி போட்டு வேகவைக்கவும்.
இறக்கி வைத்து கட்டி தட்டாமல் விரைவாகக் கிளறி விடவும்.
சிறிது நேரம் மூடி வைத்து, கை பொறுக்கும் சூடு வந்த பிறகு சப்பாத்தி மாவு போல பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் தெளிக்கவும்.
உருண்டைகள் செய்து அரிசிமாவில் புரட்டி எடுத்து மெல்லிய சப்பாத்திகளாக இடவும்.
சூடான தோசைக்கல்லில் இருபுறமும் லேசாக நல்லெண்ணெய் விட்டு சுடவும்.
வெஜிடபிள் தேங்காய்ப்பால் குருமா, ஆலுமட்டர், குடமிளகாய் மசாலா போன்றவற்றுடன் பரிமாறவும்.
|