தேவையான பொருட்கள் :
சேமியா - 1 கோப்பை
ரவை - 1 கோப்பை
ஜவ்வரிசி - கோப்பை
அவல் - 1 கோப்பை
கோதுமை ரவை - 1 கோப்பை
வெள்ளை சோளம் - 1 கோப்பை
எண்ணெய் - 1 கோப்பை
நறுக்கிய காய்கறிகள் - 2 கோப்பை
வெங்காயம் - 1 கப்
தக்காளி - 1 கப்
இஞ்சி-பூண்டு விழுது - 1 மேஜைக்கரண்டி.
பச்சை மிளகாய் - தேவையான அளவு
கொத்துமல்லி - தேவையான அளவு
செய்முறை :
பச்சை மிளகாய், கொத்துமல்லி, பூண்டு, இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
எல்லா ரவை வகைகளையும் வாணலியில் தனித்தனியாக சிவக்க வறுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு தாளித்து வெங்காயம், தக்காளி முதலில் வதக்கி, பின்பு காய்கறிகள், அரைத்த மசாலா போட்டு பிரட்டி அடுப்பை `சிம்'மில் வைத்து மூடிவைக்கவும்.
காய்கறி வெந்ததும் வறுத்து வைத்த பொருட்களை கொட்டி வெந்நீர் தெளித்து, மூடிவைத்து வேக விடவும். சிட்டிகை மஞ்சள் பொடி, தேவையான உப்பு சேர்த்து 10 நிமிடம் மூடிவைக்கவும். பின்பு திறந்து கொத்துமல்லி தூவவும்.
சூடாக பரிமாறவும்
|