முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  இந்திய வகைகள்
 
தேங்காய் பொங்கல்
Webdunia
தேவையான பொருட்கள் :

பச்சரிசி - 1/4 கிலோ
தேங்காய் - 1
பசும்பால் - 1/4 லிட்டர்
முந்திரி - 25 கிராம்
உலர்ந்த திராட்சை - 25 கிராம்
ஏலக்காய் - 6
நெய் - 100 மி.லி.

செய்முறை :

அரிசியை கழுவி சுத்தம் செய்து துணியில் பரப்பி ஆறப்போட வேண்டும்.

சிறிது நேரம் கழித்து சிறிதளவு நெய்விட்டு பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

சிறிதளவு நெய்யில் துருவிய தேங்காயை வறுத்து வைக்க வேண்டும்.

ஒரு பாத்திரத்தில் 1/4 லிட்டர் பால் ஊற்றி 1/4 லிட்டர் நீர் விட்டு அதில் வறுத்த அரிசியை போட்டு வேகவிட வேண்டும்.

முக்கால் பதம் வெந்தவுடன், வறுத்த தேங்காய் துருவல், தேவையான உப்புச்சேர்த்து நன்றாக கிளறி வேகவிட வேண்டும்.

சாதம் நன்றாக வெந்தவுடன் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய் தூள் நெய்விட்டு நன்றாக கிளறி 5 நிமிடம் மூடி வைத்து விட வேண்டும்.

சாப்பிட மிகவும் சுவையானது.