முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு > அறுசுவை > துரித உணவு
 
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா
Webdunia
வெஜிடபிள் ஸ்டஃப்டு பரோட்டா செய்ய தேவையான பொருட்கள் :

காலிஃப்ளவர் 1 கப் துருவியது
காரட் 1 கப் துருவியது
பீட்ரூட் (அ) முள்ளங்கி 1 கப் துருவியது
வெங்காயம் 2 (பெரியது-சிறிதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்)
பூண்டு விழுது 1 ஸ்பூன்
இஞ்சி, பச்சை மிளகாய் விழுது 1 ஸ்பூன்
சீரகப் பொடி 1 ஸ்பூன்
தனியா பொடி 1 ஸ்பூன்
சாம்பார் பொடி 1 ஸ்பூன்
மசாலாப் பொடி 1 ஸ்பூன்
கொத்துமல்லி 1/2 கப் நறுக்கியது
உப்பு தேவையான அளவு
எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்


செய்முறை:

சப்பாத்திக்கு மாவு பிசைந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம் வெடித்ததும் பூண்டு விழுது, இஞ்சி, பச்சை மிளகாய் விழுதை முதலில் வதக்கவும். பிறகு வெங்காயத்தைப் போட்டு ப்ரௌனாக வரும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் அதில் சீரகப் பொடி, தனியா பொடி, சாம்பார்ப் பொடி, உப்பு போட்டு 2 நிமிடம் வதக்கி கடைசியில் ஒரு ஸ்பூன் மசாலாபொடி போட்டு கலந்து தனியாக வைக்கவும். காலிஃப்ளவர் துருவல், முள்ளங்கி, காரட் துருவலை வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு வதக்கவும். சிறிது தண்ணீர் தெளித்து நன்கு சுருண்டு வரும் வரை வதக்கவும்.

உருளைக் கிழங்கை வேக வைத்து, தோல் உரித்து கிரேவியுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். காய்கறிகள் நன்றாக வெந்ததும், வெங்காய கிரேவியை அதில் போட்டு மேலும் 2 நிமிடங்கள் நன்றாகச் சேர்த்து வதக்கி இறக்கவும். இதில் நறுக்கிய கொத்துமல்லியைத் தூவி சிறு சிறு உருண்டைகளாக பிரித்துக் கொள்ளவும். பிசைந்து வைத்திருக்கும் கோதுமை மாவை உருண்டையாக எடுத்துக் கொள்ளவும். இந்த உருண்டைகளை குழித்து சிமிழ் போல் செய்து கொள்ளவும். நடுவில் இந்த காய்கறி உருண்டையை வைத்து நாலு பக்கமும் மூடி சப்பாத்திக் கல்லில் சப்பாத்தியாக இட்டு தோசைக் கல்லில் இரு பக்கமும் நெய் விட்டு மொறு மொறுவென்று சிவந்ததும் எடுக்கவும்.
மேலும்
சேனைக்கிழங்கு கட்லட்
நூடுல்ஸ் புளி உப்புமா
இட்லி உசிலி
விருந்தோம்பல் - உங்க வீட்டில பார்ட்டியா?
வாண்டுஸ் கிச்சன் - காக்ரா சாட்