முதன்மை பக்கம்  இதர வாசிப்புக்கு  அறுசுவை  துரித உணவு
 
நூடுல்ஸ் புளி உப்புமா
Webdunia
நூடுல்ஸ் புளி உப்புமா செய்ய தேவையான பொருட்கள் :

புளி ஒரு எலுமிச்சம்படி அளவு
உப்பு 1 டேபிள் ஸ்பூன்
நூடுல்ஸ் 2 டம்ளர்
எண்ணெய் 100 கிராம்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 1 டீஸ்பூன்
வற்றல் மிளகாய் 4 கிள்ளியது


செய்முறை

புளியையும், உப்பையும் சேர்த்து 1 டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்து, அதில் 2 டம்ளர் நூடுல்ஸை கொட்டி கரைத்துக் கொள்ளவும்

வாணலியில் 100 கிராம் எண்ணெய் விட்டு அது காய்ந்ததும் அதில் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல் முதலியவைகளை போட்டு சிவக்க வறுத்துக் கொண்டு கரைத்து வைத்துள்ள நூடுல்ஸ் கட்டிக் கொள்ளாதவாறு கிளறி மேலும் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு கிளறி வெந்ததும் இறக்கி வைத்து விடவும்.

ஆறிய பின் பரிமாறவும்.
மேலும்
இட்லி உசிலி
விருந்தோம்பல் - உங்க வீட்டில பார்ட்டியா?
வாண்டுஸ் கிச்சன் - காக்ரா சாட்