காக்ராக்களை நொறுக்கிக் கொள்ளலாம். அல்லது ஒன்றிரண்டாக ஒடித்துக் கொள்ளலாம். இத்துடன் நாம் துருவி வைத்துள்ள காரட், வெங்காயம், கொத்தமல்லி, சட்னி வகைகள், (வெள்ளரித் துண்டுகள் போடலாம்) சேர்த்து சாப்பிடலாம்.
பார்த்தீர்களானால் காக்ரா கோதுமை மாவில் செய்தது கார்போ ஹைட்ரேட், காய்கறி வகைகள் வைட்டமின் சத்து, பேரீச்சம்பழம் மிகவும் சத்தானது. வெல்லத்தில் இரும்பு சத்து, புதினா, கொத்தமல்லி இவற்றிலும் ஹ, நு வைட்டமின்கள் உள்ளது. எலுமிச்சை சாறு வைட்டமின் ஊ. ஆக மொத்தம் மிகவும் சுவையான சத்தான உணவு. ஸ்கூலிலிருந்து வந்த பின், குழந்தைகளே தாங்களே கலந்து சாப்பிடலாம். முழுமையான ஆரோக்யமான காக்ரா சாட்டை செய்து பாருங்கள்.
காக்ரா.................................................- 8 புதினா சட்னி......................................- விருப்பத்திற்கேற்ப மீடா சட்னி..........................................- விருப்பத்திற்கேற்ப பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 1/2 கப் பொடியாக நறுக்கிய தக்காளி.........- 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம்....- 1 கப் துருவிய காரட்..................................- 1 கப்
இதில் முதலில் காக்ரா
இது கடைகளில் ரெடிமேடாகக் கிடைக்கும். மெலிதாக முறுமுறுவென்று தகடு போலிருக்கும். இது, மிக மெல்லியதாக அப்பளம் போல் சப்பாத்தி இட்டு அதை தோசைக்கல்லில் மேல் போட்டு, வாட்டி வாட்டி எடுத்து தகடு போல் செய்திருப்பார்கள்.
வட இந்திய அப்பளம் விற்கும் கடைகளிலோ, டிபார்ட்மெண்ட் கடைகளிலோ கிடைக்கும். புதினா சட்னி ரெடியாகவும் கிடைக்கும்.
|